யார் இந்த சென்னிமலை கபாடி A.C. தங்கவேல் அவர்கள்?
![]() |
Kabaddi A.C. Thangavel |
தற்போது ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் பொறுப்புச் செயலாளராக தேர்வு பெற்று பணியாற்றி வருகிறார்..
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1971 -ஆம் ஆண்டு பிறந்தவர்..சென்னிமலை, அர்த்தனாரிபாளையம் இளம் சிங்கங்கள் கபாடி அணியில் லெப்ட் கார்னர் ஆடிய விளையாட்டு வீரர்.
1988-ல் பாரதி வீர விளையாட்டு கழகத்தினை நண்பர்களுடன் இணைந்து தொடங்கி, பாரதி பாய்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடி வந்தவர்..
ஈரோடு மாவட்ட கபாடி கழக இணைச் செயலாளரான, அண்ணார் அவர்கள், தற்போது மாவட்ட செயலாளராக (பொறுப்பு) தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்....
இவர் பொறுப்பு செயலாளர் ஆன பிறகு, ஈரோடு மாவட்ட கபாடி கழக நிர்வாகிகளுடன் இணைந்து ஈரோடு மாவட்ட அணிகள் போட்டி தொடங்கும் நாளின்(சனி)இரவு 12 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.குறைந்த பட்சம் 10 வீரர்களுடன் புகைப்படம் எடுத்து, நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்..
இரவு 12 மணிக்குள் வருகையை உறுதி செய்து, குறைந்தபட்சம் 10 வீரர்களுடன் ஒரே சீருடையில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அணிகளுக்கு மெடிக்கல் கிட் பாக்ஸ் வழங்கி வருவது..வெளியூர் அணிகளுக்கு அதிகாலை 2 மணி வரை பதிவு.பிறகு, போட்டிகள் முடித்து, பரிசளிப்பு விழா, இரவு 12.00 மணிக்குள் ( ஞாயிறு) முடிப்பது என திட்டமிடலுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இதனால்
போட்டி நடத்துபவர்கள், சிறப்பு விருந்தினர்கள், ரசிகர்கள், வீரர்கள், நடுவர்கள் என அனைவருக்கும் இயல்பாக அடுத்த நாளை எதிர்கொள்ள வழிவகை செய்கிறது.இதில் சிறப்பு என்ன என்றால், இவர் பொறுப்பு ஏற்ற பிறகு, அனைவரின் முழுமையானதாக ஒத்துழைப்பு கிடைக்கிறது..
போட்டி நடத்தும் களத்திற்கு நேரடியாக சென்று கருத்து- வேறுபாடுகள் வந்தாலும் அதனை பேசி சரி செய்து விதிமுறைகளை செயல்படுத்துகிறார்.. உறுதிபடுத்துகிறார்..
மேலும் காப்பீட்டின் அவசியம், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பாரதிவீர விளையாட்டு கழகத்தின் மூலம் மாநில, அகில இந்திய கபாடி போட்டிகளை தொடர்ந்து 1988-ல் இருந்து நடத்தியவர்..அதில் குறிப்பிடத்தக்ககபாடி போட்டிகள் ..1994 பாரதி வீர விளையாட்டு கழகம் நடத்திய மாநில கபாடி போட்டியில் தமிழகத்தின் ஆகச் சிறந்த அணிகள் கலந்து கொண்டது.
அதில் ICF முதலிடமும், TNEB 2- வது இடமும், சன்பேப்பர் மில் 3-வது இடமும், வெண்ணிலா ஒட்டன்சத்திரம் 4- வது இடமும் பெற்றனர்..
2010- ல் அகில இந்திய கபாடி போட்டியை சென்னிமலையில் நடத்தியபோது, அப்போது இந்தியாவின் மிகச் சிறந்த அணியாக இருந்த Air India முதல்முறையாக தமிழகத்திற்கு வருகை தந்து முதல் பரிசினை வென்றார்கள் என்பது நினைவு கூறத்தக்கது..👍🏻
2013 -ல் அகில இந்திய கபாடி போட்டியை சென்னிமலையில் நடத்தியபோது, அப்போது இந்தியாவின் மிகச் அணிகளான ONGC, AirIndia, EME , Railway, அரியானா, மும்பை அணிகள் என வட மாநில அணிகள் கலந்து கொண்டன..
இதில் B.C. ரமேஷ் அவர்களின் தலைமையில் ஆடிய SBM ( State bank Mysore) அணி முதல் பரிசு பெற்றது.. ( அந்த அணியில் தமிழக வீரர்கள் இருந்தது சிறப்பு)..
இந்தப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அண்ணார் சார்ந்த கமிட்டியின் ஏற்பாடுகள் சரியான திட்டமிடலுடன் மிகச் சிறப்பாக இருந்தது ..
ஏன் இவரை தமிழக கபாடி உலகம் கொண்டாடுகிறது...?
2016 -ல் அக்டோபரில் இவரின் கபாடி சட்டப் போராட்டம் தொடங்கியது..ஈரோடு, தமிழக கபாடி கழகத்திற்கு எதிராக முறையாக தேர்தல் வேண்டிய சட்டப் போராட்டங்கள் சென்னையில் இருந்து டெல்லி வரை சென்று இந்தியா கபாடி உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்..
தமிழக கபாடி நிர்வாகம், AKFI பற்றிய விழிப்புணர்வை கபாடி சார்ந்தவர்களுக்கு ஏற்படுத்தியவர்.." கபாடி போராளி" என்றால் மிகையாகாது.
தமிழகத்தின் எண்ணற்ற அணிகளுக்கு போட்டி நடத்த நன்கொடை, பனியன் அன்பளிப்பு, காயத்தில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவி, கல்லூரியில் சேர கபாடி வீரர், வீராங்கனைகளுக்கு உதவி என தொடர் உதவிகளை செய்து வருகிறார்.
சென்னிமலை அரிமா, ரோட்டரி கிளப் உறுப்பினராக உள்ள அண்ணார் அவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பல மாணவ -மாணவிகளை அவரும், அவர் நண்பர்கள் உதவி உடன் படிக்க வைக்கிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று......
அண்ணார் அவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலை பிரதானமாக கொண்டவர்..
அதில் வரும் வருமானத்தின் பெரும் பகுதியை கபாடிக்கு செலவு செய்யும் நல்உள்ளம் படைத்தவர்..கபாடி வீரர்களுக்கு மிகவும் மரியாதை கொடுக்கக் கூடியவர்...தமிழக கபாடி வரலாற்றை முற்றிலும் அறிந்தவர்.
தங்களின் ஆசை, குறிக்கோள்,கனவு என்ன என கேட்டபோது அவரின் பதில்
" கபாடி வீரர்களிடம் போட்டி- பொறாமை தவிர்க்க வேண்டும், கபாடி உணர்வு தலைத்தோங்க வேண்டும், உண்மை உணர்வுடன் கபாடியை நேசிக்க வேண்டும், லாபநோக்கத்துடன் கபாடியை கொண்டு செல்லக் கூடாது, எந்த வீரராக இருந்தாலும் கபாடிக்கு பெருமை சேர்க்க வேண்டும், அதன் அழிவிற்கு துணை போக கூடாது.. கபாடி வீரர்களிடம் ஒற்றுமை வேண்டும்." எனக் கூறினார்.
அண்ணார் அவர்கள், கபாடி உடன், பல்வேறு சமுதாய, நற்பணிகளை செய்து வருகிறார்.. அத்தனையும், குறிப்பிட முடியவில்லை..
கருத்தாக்கம்: திருப்பூர் துரைராஜ்(DR)
TAGS: ChennimalaiKabaddi | ACThangavel | KabaddiLegends
0 Comments