பிகில் திரைப்படம் ஒரு கண்ணோட்டம்
இளைய தளபதி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான படம்தான் பிகில்
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கில்லி படத்திற்கு பிறகு விளையாட்டை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் படம் பிகில்
கில்லி திரைப்படத்தில் கபடியை அடிப்படையாகக் கொண்டு சிறப்பான திரைக்கதை அமைத்து வெற்றி பெற வைத்த நடிகர் விஜய் அவர்கள் மீண்டும் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை அமைத்திருக்கிறார்
ராயப்பன் கதாபாத்திரத்திற்காக மிகவும் மெனக்கெட்டு
உழைத்து இருப்பது கண்கூடாக தெரிகிறது
மூன்று மணிநேரப் படத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கால்பந்து மைதானத்தை காட்டுவதால் கால்பந்து விளையாட்டின் மேல் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும்
விஜய் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்த உள்ள இப்படம் பொது ரசிகர்களிடம் எடுபடுமா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
பிகில் படத்தின் விமர்சனம் அடுத்த பதிவில் வரும்,உங்களுக்கு பிகில் படம் பிடித்து இருக்கிறதா என்பதை தவறாமல் கீழே கமென்ட் கூறவும்👍
பிகில் தீபாவளிக்கு விருந்து படைக்குமா?
0 Comments