சமீபத்தில் பார்த்த இரண்டு விளையாட்டை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களில் என் மனதை சற்று உறுத்திய காட்சி
1) கென்னடி கிளப் 2) பிகில். கென்னடி கிளப் படத்தில் ஒரு காட்சி.. கபடி கோச் பாரதி ராஜா , தன் முன்னாள் மாணவர் சசி குமாரை (ரயில்வேயில் ஆஃபிசர். ) தற்போதைய மாணவிகள் முன் கன்னத்தில் அறைந்து "போடா வெளியே":என திட்டி விடுகிறார். சசி குமாரும் ஒன்றும் சொல்லாமல் அறையை விட்டு வெளியே வந்து முகம் சுருங்கி நிற்கிறார். பின் மாணவிகள் வெளியே வந்து, சசி குமாரிடம் எங்களால்தா உங்களை அடித்து விட்டார், எங்களை மன்னியுங்கள் சார் என வருத்த படுகிறார்கள். அப்போது சசிகுமார் சிரித்து கொண்டே, நம்ம ஐய்யாதானே அடித்தார். விடுங்க, என பணிவோடு சிரிக்கிறார். .... பிகிி ல ஆரம்ப காட்சி.... ஒரு கல்லூரி பழயதாகி விட்டதாக கூறி இடிக்க ஆணை வந்ததை எதிர்த்து மாணவர்கள் போராடுகிறார்கள். அவர்களை சமாதானம் செய்ய ஒரு மந்திரி வருகிறார். அந்த மந்திரியை மாணவர்கள் கலாய்க்கிறார்கள். ஒரு மாணவி, மந்திரியை பார்த்து " நீ மூடிக்கிட்டு போய்யா " என கூறுகிறார். கடுப்பகும் மந்திரி தன் ஆட்களை விட்டு மாணவர்களை தாக்குகிறார். ... இதில் அந்த மந்திரியும் கெட்டவராகவே காண்பிக்க படுகிறார். சரி, மந்திரிதான் கெட்டவர் என்றால், ஒரு மந்திரியை அவர் பதவிக்காக வேணும் மதிக்க தெரியாத பொறுக்கி கும்பலாக மாணவர்கள் காண்பிக்க படுகிறார்கள்.
இந்த இரண்டு காட்சிகளில் எதை பார்க்கும் மாணவர்கள் மனதில் ஒழுக்கம் வளரும்...? எவர் மனதில் மரியாதை வளரும்.. இந்த காட்சியை இன்னும் பல மடங்கு நல்ல படியாக எடுத்து இருக்கலாம். ஆனால் விஜய்க்கும் அட்லிக்கும் தோன்றியது இந்த சீன் தான் என்றால் அவர்களின் மனதில் எப்படி பட்ட எண்ணங்கள் இருக்கும் என பாருங்கள். ... Mr. விஜய் அவர்களே, உங்களுக்கு இந்த தமிழ் சமுதாயம் பலவற்றை வாரி வழங்கி உள்ளது. ஆனால் நீங்கள் செய்யும் காரியம் இப்படி பட்ட பொறுக்கி தனங்களை காண்பிப்பது தானா..? இதை போன்ற காட்சிகளை பார்த்த உங்கள் ரசிகன் அவனும் பொறுக்கி தனத்திலும், பொது சொத்துக்களை அடித்து நொறுக்கு் வதிலும் ஆச்சர்யம் ஏதும் இல்லை. .... அரசியலில் பெரிய அளவில் சாதிக்க ஆசை படுகிறீர்கள். அதற்குரிய நல்லபண்புகளை வளர்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருவேளை வரும் காலத்தில் நீங்கள் ஒரு கட்சி துவக்கி நாலும் இதே ரசிகன் தான் தொண்டனாக இருப்பான். இதே அடாவடி அங்கேயும் தொடரும் தானே.. ... உங்களை சுதந்திர போராட்ட கதைகளை சினிமாவாக எடுக்க சொல்ல வில்லை. பொருக்கிகளை உருவாக்காத வாரு படம் எடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.. தங்க பதக்கம் போல படம் எடுக்க சொல்ல வில்லை. ஸ்ரீ வித்யா வின் முதுகை தடவி யதற்கு இனியாவது பிராயச்சித்தம் தேடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.. .... மொத்தத்தில் இது போன்ற படங்கள் ஓடாமல் இருப்பதே தமிழ் சமூகத்திற்கு நல்லது. விளையாட்டு என்பது ஜாதி மதங்களை மறந்து, ஒழுக்கமாக மனிதத் தன்மையோடு ,மனிதனாக வாழவேண்டும் என்பதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டது, அந்த விளையாட்டு படத்தில் இந்த விபரீத காட்சிகள் தேவையில்லாத ஒன்று என்பது என்னுடைய கருத்து. உங்களுடைய கருத்தையும் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதியுங்கள்.
0 Comments