3-வது கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், தமிழ்நாடு ஆண்கள் பெண்கள் கபடி அணி அறிவிப்பு
கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2020 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் அசாமின் குவஹாத்தியில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்வில் 20 விளையாட்டு போட்டிகளில் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் வீரர்கள்பங்கேற்கிறார்கள். 13 நாள் நிகழ்வு குவஹாத்தியின் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
கபடி போட்டியானது சோனாபூரில் உள்ள லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் ஜனவரி 10 முதல் 13 வரை நடைபெறும். U-17 மற்றும் U-21 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்க உள்ள ஆண்கள் கபடி அணி, மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில் (ரேஸ்கோர்ஸ்) பயிற்சி மேற்கொண்டனர்.
அவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டுமென்று தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழக தலைவர் திரு.சோலை M.ராஜா அவர்களும், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.லெனின் அவர்களும், மதுரை மாவட்ட அமெச்சூர் கபாடி கழக செயலாளர் திரு.அகஸ்டின், துணை தலைவர் திரு.மனோகரன், இணை செயலாளர் திரு. காசி ராஜன், நடுவர்கள் குமரேசன், சிவா, அமர்மொழி, மூர்த்தி ஆகியோர் கபடி வீரர்களை வாழ்த்தி வழி அனுப்புகிறார்கள்

21-வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணி விவரங்கள்;
- M.மதிவாணன் கடலூர் (C)
- M.பாபு கன்னியாகுமாரி
- M.சிவா கன்னியாகுமாரி
- V.விஸ்வநாத் தூத்துக்குடி
- Lமாசானமுத்து தூத்துக்குடி
- A.சித்தாத்தன் தஞ்சாவூர்
- A.நந்தகுமார் சிவகங்கை
- R.சேதுமாதவன் திருவாரூர்
- M.அருண்குமார் விழுப்புரம்
- M.சிவதரண் மதுரை
- M.விஸ்வநாத் காஞ்சிபுரம்
- R.யுபிஎஸ் திருநெல்வேலி
STAND BY:
- M.அருள் பாண்டியன் மயிலாடுதுறை
- N.அபினேஷ் கன்னியாகுமரி
- M. அஜித் குமார் தஞ்சாவூர்
ராஜாராம்- அணி பயிற்சியாளர்,ஜெயகாந்தன் - அணி மேலாளர்.
21-வயதிற்கு உட்பட்ட பெண்கள் அணி விவரங்கள்;
பெண்கள் கபடி அணி PKR மகளிர் கல்லூரியில் பயிற்சி மேற்கொண்டனர்.அவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டுமென்று தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழக செயலாளர் திரு.சபியுல்லா,சத்தியன் வெங்கடாசலம் ஆகியோர் வெற்றி பெற வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
Khelo india கபடி போட்டி கால அட்டவணை தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்
TAG: Khelo India, Khelo India-2020, Khelo India Kabaddi team, Tamilnadu Kabaddi team in Khelo India, youth games, Tamilnadu team
0 Comments