முதலமைச்சர் கோப்பைக்கான CM TROPHY மாவட்ட அளவிலான போட்டித் தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன
ஆண்டுதோறும் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் 10 விளையாட்டுகள் அடங்கும்.
கலந்து கொள்ளும்அனைத்து மாவட்ட வீரர்களும் இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஆண்டுதோறும் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் 10 விளையாட்டுகள் அடங்கும்.
- தடகள போட்டி
- கபடி
- ஜூடோ
- குத்துச்சண்டை
- டென்னிஸ்
- நீச்சல் போட்டி
- ஹாக்கி
- பேட்மிட்டன்
- பேஸ்கட் பால்
- வாலிபால்
பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
கபடி போட்டியில் கலந்து கொள்வதற்கு வீரர்களுக்கான விதிமுறைகள்;
கபடி போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் 25 வயதிற்குள் இருக்கவேண்டும் ( 01-01-1994 அன்றோ அதற்குப்பிறகோ பிறந்திருக்க வேண்டும்,பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்)
கபடி குழு போட்டிகள் அனைத்தும் Knock out – Cum – League முறையில் நடைபெறும்.
மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், 5 வருடம் தமிழகத்தில் வசித்ததாற்கான புகைப்படத்தில் கூடிய சான்றிதழ்(Ration Card Xerox / Voter ID Xerox / Driving License Xerox ) அளிக்கப்பட வேண்டும்.
கபடி போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் தங்களின் சொந்த மாவட்டத்திற்கோ அல்லது தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திற்கும் அல்லது தாங்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி மாவட்டத்திற்கோ விளையாட முடியும்.
மாவட்ட போட்டியில் கலந்து கொள்ளாத வீரர்கள், நேரடியாக மாநிலப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது.
மாவட்ட போட்டியில் 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்டத்தின் சார்பாக மாநில போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.
(மேலே உள்ள அனைத்து விதிகளும் பெண்கள் கபடி அணிக்கும் பொருந்தும்)
முதலமைச்சர் கோப்பைக்கான (CM TROPHY) மாநில அளவில் நடைபெறும் போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
முதலிடத்தை பிடிக்கும் கபடி அணிக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இரண்டாம் இடம் பிடிக்கும் கபடி அணிக்கு தலா 75,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
மூன்றாம் இடம் பிடிக்கும் கபடி அணிக்கு தலா 50,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
விளையாட்டுப்போட்டிகளில் விதிமுறைகளை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
குறிப்பு:புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும்
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tag: CM TROPHY | cm trophy kabaddi match | தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் | cm trophy 2020 schedule |cm trophy in TamilNadu 2020 | CM Trophy sport schedule
--------------------------------------------------------------------------------------------------------------------------
0 Comments