Tamil nadu kabaddi premier league match result TKPL

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் TKPL கோவை-மதுரை மண்டல  போட்டி முடிவுகள்

Brand Media Eventz மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் தமிழக அளவிலான, "தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக்" கபடி போட்டி இரண்டாவது மண்டலமான கோயம்புத்தூரில் 1,2/02/2020 நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

Tamil nadu kabaddi premier league match result TKPL


இறுதிப் போட்டியை கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அம்மன் அர்ஜுன் அவர்கள் தொடங்கி வைத்தார்

8 மாவட்ட அணிகள் பங்கேற்ற தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்ற
கரூர் மாவட்ட கபடி அணியும், சேலம் மாவட்ட கபடி அணியும் இறுதிப் போட்டியில் மோதின.
தமிழகத்தின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் 30 க்கு 28 என்ற புள்ளி கணக்கில் கரூர் மாவட்ட அணி வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றது.
Tamil nadu kabaddi premier league match result TKPL

முதல் நான்கு இடங்களை பெற்ற அணிகளான கரூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நான்கு அணிகளும் சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.

சென்ற வாரம் நடைபெற்ற மதுரை மண்டல கபடி போட்டிகள் முதலிடத்தை தூத்துக்குடி மாவட்ட கபடி அணியும்இரண்டாவது இடத்தை விருதுநகர் மாவட்ட கபடி அணியும் பெற்றது நினைவிருக்கலாம்.
Tamil nadu kabaddi premier league match result TKPL


இந்த போட்டியின் கால அட்டவணையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மூன்றாவது TKPL லீக் சுற்று, வடக்கு மண்டலமான திருப்பத்தூர் மாவட்டம் "ஜோலார்பேட்டையில்" Jolarpettai - 08 & 09th February நடைபெறவிருக்கிறது.
நான்காவது TKPL சுற்று லீக் போட்டி திருச்சி (Trichy - 15 & 16th February) நடைபெறவிருக்கிறது.

தகுதி சுற்றில் வெற்றி பெறும் 4 அணிகள் வீதம் நான்கு மண்டலத்திலிருந்து 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் (Chennai - 27 to 29 March)  மிகப் பிரம்மாண்டமான TKPL இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

மிக பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

முக்கிய செய்தி: கொரோனா பாதிப்பு காரணமாக மாநில அளவிலான இறுதிப் போட்டி கைவிடப்பட்டது.

Tags : TKPL, Tamil Nadu kabaddi premier league, தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக்,கபடி போட்டி

Post a Comment

0 Comments