தமிழக முதலமைச்சர் கோப்பை கபடி போட்டி
தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில்13/03/2020முதல் 15/03/2020 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 37 மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டன.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர், வீராங்கனைகள் அந்தந்த மாவட்டங்களில் தகுதி போட்டி நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
[மாவட்ட கபடி போட்டி விவரங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்]
![]() |
பெண்கள் கபடி போட்டி அட்டவணை |
![]() |
ஆண்கள் கபடி போட்டி அட்டவணை |
நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்று நான்கு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்,
தஞ்சாவூர்
கன்னியாகுமரி
கரூர்
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்;
சேலம்தஞ்சாவூர்
கன்னியாகுமரி
கரூர்
இந்த நான்கு அணிகளுக்கும் லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் அதிக புள்ளிகள் பெற்று சேலம் மாவட்ட கபடி அணி சாம்பியன் பட்டத்துடன் Rs.12 லட்சம் வென்றது.
2வது பரிசு.... கரூர் மாவட்டம்
3ம் பரிசு... கன்னியாகுமரி மாவட்டம்
பெண்கள் கபடி போட்டி முடிவு;
மதுரையில் கடந்த மூன்று நாட்களாக (13-03-2020 முதல் 15-03-2020 வரை) நடைபெற்று வரும் மாநில அளவு முதலமைச்சர் கோப்பைக்கான கபாடிப்போட்டியில், பல்வேறு சுற்றுக்களில் விளையாடி தொடர் வெற்றியை கடந்து, ஒட்டன்சத்திரம் சண்முகம் நினைவு வெண்ணிலா கபடிக்குழு மற்றும் கொசவபட்டி அக்சயா பள்ளி ( SMVKC + AAMS) வீராங்கனைகள் இன்று நடந்த மூன்று இறுதிப்போட்டிகளிலும் அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் (#SMVKC_39_Vs_CHENNAI _10) வென்று ஏழாம் முறையாக முதலமைச்சர் கோப்பையைக் கைப்பற்றி முதல் பரிசைப்பெற்று (ரூபாய்_12_லட்சம்) சாதனை படைத்தது.
இந்த கபடிக்குழு அருள்மொழி தலைமையில் தங்கம்மாள், பவதாரணி, பிரித்வி, சௌந்தர்யா & சௌந்தர்யா, சத்யபிரியா, சித்ரா, மேகலக்ஷ்மி, ஆஷா, காயத்ரி மற்றும் ஜனனி ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
குழப்பமான சிஎம் டிராபி(CM Trophy) லீக் போட்டியின் விதிமுறைகள்;
நண்பர்களே நடந்து முடிந்த முதலமைச்சர் கோப்பை கபாடி போட்டியில் நான்கு அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றது சேலம், கரூர்,தஞ்சாவூர், கன்னியாகுமரி.
இதில் தஞ்சாவூர் அணி அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது அதனால் நான்காம் இடம்.
கன்னியாகுமரி அணி தஞ்சாவூர் மற்றும் கரூர் அணிகளை வென்றது
சேலம் அணி தஞ்சாவூர் மாறும் கன்னியாகுமரி அணிகளை வென்றது
கரூர் அணி தஞ்சாவூர் மற்றும் சேலம் அணிகளை வென்றது
மூன்று அணிகளும் இரண்டு போட்டிகளை வென்றது. எனவே பாயிண்ட் அடிப்படையில் சேலம் முதலிடம், கரூர் இரண்டாமிடம், கன்னியாகுமரி மூன்றாம் இடம் பெற்றது
கரூர் அணி சேலம் அணியை 24 பாயிண்ட் வித்தியாசத்தில் வென்றிருந்தால் மட்டுமே முதல் பரிசு பெற்றுருக்க முடியும்.
TAG: CM TROPHY | cm trophy-2020 | Mudurai kabaddi match | cm trophy winner
0 Comments