How to organize a Kabaddi Tournament For Better Result
ஒரு சிறந்த கபடி போட்டியை நடத்தி முடிப்பதற்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்...!
கபடி ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடம்"சேகரிக்கப்பட்ட விவரங்களின் " அடிப்படையில் இந்த கட்டுரை தொகுக்கப் படுகிறது.
Good Scoring System;
ஒரு கபடி போட்டி நடக்கும்போது ரசிகர்கள் ஆகட்டும் அல்லது விளையாடும் விளையாட்டு வீரர்கள் ஆகட்டும், புள்ளிகளை(score) உடனுக்குடன் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருப்பார்கள்,அதனால் பார்வையாளர்களுக்கு தெரியும்படி ரன்னிங் ஸ்கோர்போர்டு அமைப்பது மிகவும் சிறந்தது.
விளையாட்டுப் போட்டியை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றுவது வர்ணனை(commentary),சலிப்பு ஏற்படுத்தும் விறுவிறுப்பு இல்லாத போட்டிகளையும் கூட ஆர்வமாக பார்க்க வைக்கும் வல்லமை commentaryக்கு உண்டு,கபடி புள்ளி(data) விவரங்களுடன் திறமையாக பேசும் நபர்களை ஏற்பாடு செய்து வர்ணனை செய்ய வைத்தால் போட்டியை "கபடி ரசிகர்கள் அல்லாதவர்களும் " ரசித்து பார்ப்பார்கள்.
Player stats;
கபடி வீரர்களின் பெயர் மற்றும் அவரின் சாதனைகள் போன்றவற்றை புள்ளிவிவரங்களுடன் ஒரு தெரியப்படுத்தும்போது, பார்வையாளர்கள் உன்னிப்பாக பார்ப்பதற்கு தூண்டுகோலாக இருக்கும்,அதற்கு வீரர்களின் புள்ளி விவரங்கள் சேகரிப்பது மிகவும் இன்றியமையாதது.
கபடி போட்டி சிறப்பாக அமைய சிறந்த கபடி அணிகளும், அதை ரசித்து பார்க்க பார்வையாளர்களும் மிகவும் முக்கியம்.கபடி போட்டியின் விவரங்களை ஆன்லைன்,ஆஃப்லைன் மூலமாக அனைவரும் அறியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்,இதற்கு சமூக வலைதளங்கள்(like facebook, whatsapp, youtube) மற்றும் உள்ளூர் செய்தித்தாள் & தொலைக்காட்சிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கபடிகாக நடத்தப்படும் தமது சமூக வலைதள குழுக்களை பற்றி அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Live streaming and videos;
பல்வேறு ஊர்களில் கபடி போட்டி நடத்துவது "ஊரின் கௌரவமாக" பார்க்கப்படுகிறது,சிறிய கிராமங்களில் நடக்கும் கபடி போட்டிகளையும் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஒரு அற்புதப் வரபிரசாதம் சமூக இணையதள ஊடகங்கள்.நேரடி ஒளிபரப்பாக அல்லது பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும் காணொளியாக நம்முடைய கபடி போட்டிகளை உலக மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம்.கொண்டு சேர்ப்பதற்கு யூடியூப் பேஸ்புக் வலைதள சேனல்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Gk Sports Kabaddi Youtube/Facebook சேனல் கபடி போட்டிகளை ஒளிபரப்புகிறது,தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும் Mail Id: gksportskabaddi@gmail.com
Honest refereeing;
கபடி போட்டிகளுக்கு மிகவும் இன்றியமையாதது நடுவர்களின் பங்களிப்பு,அனுபவம் வாய்ந்த திறமையான நடுவர்களை கொண்டு போட்டி நடக்கும்போது தேவையற்று ஏற்படும் சர்ச்சைகளை தவிர்த்து சுமுகமாக போட்டிகளை நடத்தி முடிக்க ஏதுவாக இருக்கும், போட்டிகளும் ரசிக்கும்படி இருக்கும்.
Sharing videos & Kabaddi Photos;
இணையதளத்தின் அசுர வளர்ச்சி,கபடியின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது,சமூக ஊடகங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் கபடியின் வளர்ச்சி இன்னும் அபரிமிதமாக இருக்கும்.நம்ம ஊரில் நடைபெற்ற கபடி போட்டியின் போட்டோக்களையும், வீடியோக்களையும்,அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைப்பதன் மூலம் நம்முடைய ஊரின் பெருமையும் கபடியின் பெருமையை உலகம் முழுவதும் பரவும்.
தமிழகத்தில் உள்ள சிறந்த கபடி சேனல்களை(youtube & facebook) பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Creating Great Content: Like Match Videos, Live Stream, Highlights, Best Player videos
Live Score
Player Stats
History of the Tournament
TAGS: How to organize Kabaddi tournament in Tamil Nadu | Kabaddi tournament planning Tamil Nadu |Kabaddi event management Tamil Nadu | Steps to host Kabaddi tournament Tamil Nadu | Tamil Nadu Kabaddi tournament rules and regulations
Organizing Kabaddi competition Tamil Nadu | Kabaddi tournament guidelines Tamil Nadu | Kabaddi tournament setup Tamil Nadu | Hosting Kabaddi event in Tamil Nadu | Kabaddi championship organization Tamil Nadu
0 Comments