Ad Code

Pro kabaddi season-8 postponement

 புரோ கபடி சீசன் -8 ஒத்திவைப்பு

Pro-kabaddi-season-8-postponement
Image Credit: pro kabaddi official website


கபடி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் கபடி போட்டிகளில் ஒன்று புரோ கபடி,கொரோனா ஊரடங்கு காரணமாக ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்க வேண்டிய புரோ கபடி சீசன்-8 போட்டி தொடங்குமா? தொடங்காத என்று முடிவு தெரியாமலே இருந்தது.

புரோ கபடி நிர்வாகம், மத்திய விளையாட்டு அமைச்சகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி புரோ கபடி போட்டியை நடத்துவது ஒரு செய்தி வெளியானது,IPL போட்டி  தொடங்கியவுடன் PRO KABADDI ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது,ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக புரோகபடி ஒத்திவைக்கப்பட்டதாக புரோ கபடி நிர்வாகம் தன்னுடைய வெப்சைட்டில் அறிவித்தது.

கபடி வீரர்களின் உடல் நலன் மற்றும் பார்க்க வரும் ரசிகர்களின் நோய் தொற்று ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த போட்டியானது ஒத்திவைக்கப்பட்டதாக நிர்வாக PRO KABADDI செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வருடம் தமிழகத்தில் இருந்து புதியதாக 2 கபடி வீரர்கள் புரோ கபடி ஏலத்திற்கு தேர்வாகி இருந்தனர்,சேலம் சாமி பிரதர்ஸ் அணியில் விளையாடும் திரு.ராம் அவர்களும்,சென்னை ICF அணியில் விளையாடும் திரு.சஜின் அவர்களும் இந்த வருடம் புரோ கபடி ஏலத்திற்கு தேர்வாகியிருந்த கபடி வீரர்கள்.

புரோ கபடி நிர்வாகத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்,இந்த வருடம் புரோ கபடிக்கு தேர்வான வீரர்களுக்கு, அடுத்த வருடம் நடக்கும் புரோ கபடியில் இடம் கிடைக்குமா? என்ற ஐயமும் எழுந்துள்ளது.

கோரனா நோயின் பாதிப்பு முற்றிலுமாக நீக்கும் பட்சத்தில் அடுத்த வருடம்(2021) புரோ கபடி சீசன்-8 நடத்தப்படும் என்று புரோகபடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tag: pro kabaddi news |  pro kabaddi season-8 |  pro kabaddi Tamil players

கருத்துரையிடுக

0 கருத்துகள்