Pudukkottai District Vellanur kabaddi Match Live Update

Pudukkottai District Vellanur Kabaddi Match Live Update...

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூரில் உலக புகழ்பெற்ற மாபெரும் கபடி திருவிழா,06/02/2021 அன்று துவங்கும் தென்னிந்திய கபடி போட்டியானது தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
முதல் பரிசு தொகையாக ரூ.1 இலட்சமும் வெற்றிப்கோப்பையும் வழங்கபடுகிறது,

இரண்டாம் பரிசாக ரூ.70 ஆயிரமும்,மூன்றாம் பரிசாக ரூ.40 ஆயிரமும்,நான்காம் பரிசாக ரூ.30 ஆயிரமும் வழங்கபடுகிறது. காலிறுதி போட்டியில் தோல்வியுறும் நான்கு அணிகளுக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கபடுகிறது.

பரிசு மழை பொழிய காத்திருக்கும் இந்த கபடி போட்டியில் சிறந்த ஆட்டநாயகனுக்கு(Man of the series) இரு சக்கர வாகனமும் (Tvs Star City BIKE) ,நான்கு LED TVயும்,மூன்று ஃபிரிட்ஜ்  மற்றும் ஏராளமான பரிசுகளும், தங்க காசுகளும் வழங்கபடுகிறது.
Pudukkottai District Vellanur kabaddi Match Live Update

(படத்தில் காட்டியுள்ள பரிசுப்பொருட்கள் எடுத்துக்காட்டாக காட்டப்பட்டுள்ளது)

தமிழகத்தின் தலை சிறந்த கபடி அணிகள் அனைத்தும் இந்த போட்டியில் பங்கேற்க இருப்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

"தமிழகத்தின் புகழ்பெற்ற அணிகளான அளத்தங்கரை கன்னியகுமாரி,தூர்கம்பிகா திருநெல்வேலி,கஸ்டம்ஸ் மதுரை, மூலச்சல், TK Sports திருப்பூர் ,DB JAIN COLLEGE, VRK கரூர், Lucky Star தம்மம்பட்டி,அம்மன் அல்லூர்,AMKC கோபி ஈரொடு,தென்னிந்திய கபடி அணிகளான மங்களூர்,கஸ்டம்ஸ் பெங்களூர்,J.K.அகடமி காசர்கோடு கேரளா,MEG ARMY பெங்களூர் மற்றும் பல அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை காண கீழே உள்ள லீங்கின் வழியாக செல்லவும்,

"முதல் சுற்றில் தம்மம்பட்டி அணி சிறப்பாக ஆடி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியில் ஆடிய #மணிகண்டன் அவர்களுக்கு முதல்
தங்க நாணயம் சிறப்பு பரிசாக அளிக்கப்பட்டது"
Pudukkottai District Vellanur kabaddi Match Live Update

இரண்டாவது சுற்று போட்டி:

POOL- A

  • கஸ்டம்ஸ் பெங்களூர்
  • அல்லூர் அம்மன்
  • MERETINE COLLEGE மங்களூர்
  • KGF
  • DB ஜெயின் சென்னை
  • இளம்பறவை பூங்குடி
  • VRK கரூர்
  • TK SPORTS திருப்பூர்
  • மூலச்சல் கன்னியகுமாரி
  • கஸ்பர்ஸ், சென்னை
  • கஸ்டம்ஸ் சென்னை
  • RJ பிரதர்ஸ் கோவை
  • ஆகாஷ் நினைவு
  • ICF சென்னை

POOL- B

  • தூர்கம்பிகா திருநெல்வேலி
  • வெள்ளைகவுண்டன்பட்டி
  • AMKC கோபி ஈரோடு
  • தீப நிலா,ராமநாதபுரம்
  • MEG ARMY பெங்களூர்
  • இணைந்த கைகள் பெருமநாடு
  • ஒட்டன்சத்திரம்
  • லக்கி ஸ்டார் A தம்மம்பட்டி
  • அளத்தங்கரை கன்னியகுமாரி
  • நாகை ஸபோட்ஸ் நாகை
  • 7 டைகர் சேலம்
  • பாசப்பறவை
  • JK அகாடமி கேரளா
காலிறுதி போட்டியில் விளையாடயுள்ள கபடி அணிகள்:-

தூர்கம்பிகா திருநெல்வேலி
VS
கஸ்டம்ஸ் சென்னை
DB ஜெயின்
VS
JK கேரளா
TK SPORTS திருப்பூர்
VS
CUSTOMS பெங்களூர்
காரியபட்டி தஞ்சாவூர்
VS
ICF சென்னை

காலிறுதிப் போட்டியில் தோல்வியுற்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய TK SPORTS KABADDI வீரர் மோகன்ராம் அவர்களுக்கு ரெஃப்ரிஜிரேட்டர்(refrigerator) சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது.

Pudukkottai District Vellanur kabaddi Match Live Update

SEMI FINAL:
முதல் அரையிறுதி போட்டியில் கஸ்டம்ஸ் பெங்களூர் அணியும் கஸ்டம்ஸ் சென்னை அணியும் பலப்பரீட்சை  நடத்துகின்றன.
மிகவும் கடுமையாக நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் 30-க்கு
25-என்ற புள்ளி கணக்கில் பெங்களூர் கஸ்டம்ஸ் அணி வெற்றிபெற்றது.


இரண்டாவது அரையிறுதி போட்டியில் ICF சென்னை அணியும் JK அகடமி காசர்கோடு கேரளா அணியும் மோதுகிறது.
HALF TIME SCORE
ICF-19 JK-21
Half Time வரை சம பலமாக சென்ற போட்டி பின் பாதியில் தள்ளாடியது
45-க்கு 25 என்ற புள்ளி கணக்கில் கேரளா அணி வெற்றி பெற்றது.

MEGA FINAL:

JK ACADEMY KASARGOD  VS CUSTOMS BANGALURE
ஆட்டத்தின் தொடங்கத்திலிருந்தே போட்டியை தன் பக்கத்திலே வைத்து கொண்டது பெங்களூரு கஸ்டம்ஸ் அணி, இரண்டாம் பாதியில் புள்ளிகளை பெற்றாலும் வெற்றிக்கு போதுமானதாக இல்லை கேரளா அணிக்கு
39-க்கு 20 என்ற புள்ளி கணக்கில் வெள்ளனூர் கோப்பையை வென்றது
பெங்களூரு கஸ்டம்ஸ் கபடி அணி.
Pudukkottai District Vellanur kabaddi Match Live Update
CUSTOMS BANGALURE

தொடர் நாயகன் விருது TWO WHEELER பெங்களூரு கஸ்டம்ஸ் அணி வீரருக்கு  வழங்கப்பட்டது,சிறந்த தடுப்பட்டத்திற்கான, சிறப்பு பரிசு GOLD COIN சென்னை கஸ்டம்ஸ் அணி வீரர் சுபாஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

TAG: TAMILNADU KABADDI | KABADDI MATCH | KABADDI NEWS | VELLANUR KABADDI | GK KABADDI

Post a Comment

0 Comments