Ad Code

Pro Kabaddi season 8 date time

 புரோ கபடி இந்த ஆண்டு நடக்குமா? 

2020 சென்ற ஆண்டு நடக்கவிருந்த புரோ கபடி சீசன்-8 கொரானா பெரும் தொற்றின் காரணமாக போட்டிகள் முழுவதுமாகவே நிறுத்தப்பட்டது,இந்த ஆண்டும் 2021 கொரனவின் இரண்டாம் அலை பரவியதால் திட்டமிட்டபடி போட்டியானது  ஜூலை மாதத்தில் தொடங்கவில்லை.

இப்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது புரோகபடி நடக்குமா? நடக்காதா? என்பதுதான்,புரோ கபடி நடக்கும் நடக்காது என்பதற்கான சாதக பாதகங்களை அலசும் கட்டுரையாக இந்த கட்டுரை இருக்கும்,மேலும் புரோ கபடியின் புதிய அப்டேட்கள் வந்தாலும் இந்த பக்கத்திலே அப்டேட் செய்யப்படும்.

Pro-Kabaddi-season-8

புரோ கபடி சீசன் 8 லிருந்து 12 வரைக்காண ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில்  ஒளிபரப்புவதற்கு வேறு நேரடி ஒளிபரப்பு விளையாட்டுக்கள் எதுவும் இல்லாவிட்டால் ஆகஸ்ட் மாதம் இந்த போட்டியை நடத்த திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

Mashal Sports has successfully concluded its Media Rights Auction for five Seasons (Season 8 to Season 12) of Pro Kabaddi League (PKL) to be held during 2021-2025. The Rights were offered through an open tender process, as a part of which, Star India has emerged as the successful bidder following an online auction and has retained the Consolidated Rights Package on offer.
 
கடந்த மாதம் (JUNE-21) தொடங்கிய புரோ கபடி நடுவர்களுக்கான பயிற்சி பட்டறையை சிறப்பாக வடிவமைத்து நடத்தி முடித்திருக்கிறது  மஷால் ஸ்போர்ட்ஸ்,இதுவும் இந்த ஆண்டு புரோ கபடி போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடாக பார்க்கப்படுகிறது.

Mashal Sports successfully conducts its 6th edition of the Referee Excellence Programme

யுகங்களும் சாத்தியமும்

புரோ கபடி சீசன்-8 ஜூலை மாதம் தொடங்கும் என்றும் பல இணையதளங்களும் யூடியூப் சேனல்கள் செய்திகளை வெளியிட்டன,போட்டிகள் அனைத்தும் ஒரே மைதானத்தில் நடக்கும் என்றும் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடியுமென்று அட்டவணை எல்லாம் கூட வெளியிட்டது,அந்த செய்திகள் அனைத்தும் யுகங்களாக வெளியிடப்பட்டன, ஆனால் புரோகபடி Official தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Pro-Kabaddi-2021


இந்தக் கட்டுரை எழுதும் இந்த நாளில் (JULY-21) பிரமாண்டமான போட்டியான யூரோ கால்பந்து போட்டி வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளார்கள்,இந்த பார்முலாவை மற்ற போட்டிகளுக்கும் பயன்படுத்தி அனைத்து விளையாட்டு போட்டிகளை நடத்தலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

covid-19 குறைந்து வரும் இந்த நேரத்தில் விளையாட்டுப் போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்தலாம் என்று பல மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது,கொரானா பரவல் குறைவாக உள்ள மாநிலங்களில் இந்தப் போட்டியை நடத்தலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

செப்டம்பர் மாதம் மீண்டும் ஐபிஎல் தொடங்க உள்ளதாலும்,ISL கால்பந்து போட்டியும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாலும் இந்தப் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் எந்த போட்டிக்கு முன்னுரிமை தந்து ஒளிபரப்பும் என்று தெரியவில்லை.

உலக அளவில் புகழ்பெற்ற ஐபிஎல் போட்டியை கண்டிப்பாக நடத்தும் அதேவேளையில் ISL அல்லது PRO கபடி இந்த இரண்டில் ஏதாவது ஒரு போட்டியை மட்டுமே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்த விரும்பும்,இந்த இரண்டில் எந்த போட்டியை ஸ்பான்சர்கள் அதிகம் விரும்புகிறார்களோ அந்த போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஐபிஎல்க்கு ஈடாக புரோ கபடியின் விளம்பர வருமானம் கிடையாது, அதனால் ரசிகர்களின் டிக்கெட் கட்டணம் இன்றி போட்டியை நடத்துவதற்கு புரோகபடி நிர்வாகம் கண்டிப்பாக யோசிக்கும்.

வீரர்களின் பயிற்சி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நிலையில் உள்ளதால், இந்த வருடம் கபடி போட்டி நடத்துவதற்கு PRO KABADDI நிர்வாகம் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.


சர்வதேச கபடி கூட்டமைப்பு  சங்கத்தின் தலைவரும், புரோ கபடியை  வெற்றிகரமாக நடத்தியவருமான திரு.ஜனார்தன் சிங் கெஹ்லோட் அவர்கள் சமீபத்தில் இயற்கை எய்தினார்,அதுவும்  இந்த வருடம்  புரோ கபடி நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை குறைத்துள்ளது.

Pro-Kabaddi-2021

தற்போது நம்மிடம் இருக்கும் அனைத்து டேட்டாக்களை ஆராய்ந்து பார்த்தாதில், இந்த வருடம் புரோ கபடி நடப்பதற்கான சாத்தியம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

புரோ கபடி சம்பந்தமான புதிய செய்திகள் கிடைத்தால் இந்த கட்டுரையின் கீழ் பகுதியில் அப்டேட் செய்யப்படும்


Big New Update Today 01/07/2021;

"இன்று Pro Kabaddi டுவிட்டர் பக்கத்தில் இருந்து மிகப் பெரிய அப்டேட் வந்துள்ளது,மிக விரைவில் கபடி வீரர்களுக்கான ஏலம் தொடங்கும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகுநாட்களாக புரோகபடியை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது இந்த அறிவிப்பு!
Pro Kabaddi season 8 date time

Tag: PRO KABADDI | PRO KABADDI 2021 | KABADDI NEWS TAMIL | KABADDI NEWS

கருத்துரையிடுக

0 கருத்துகள்