தூத்துக்குடி மாவட்டம் பூசனூர் கபடி போட்டி
கொரானா இரண்டாவது அலையின் காரணமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது,கடந்த சில மாதங்களாக கபடி போட்டிகள் முழுவதுமாகவே நிறுத்தப்பட்டிருந்தன,தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு போட்டிகள், பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதித்த பிறகு முதல் போட்டியாக தூத்துக்குடி மாவட்டம் பூசனூரில் கபடி போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது, 01/07/21 வியாழக்கிழமை அன்று தொடங்கிய கபடி போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 80 க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டன,
விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு உண்டான கொரானா விதிமுறைப்படி, ரசிகர்கள் யாரும் இன்றி பகல்நேர போட்டியாக மட்டுமே இந்த போட்டியானது நடைபெற்றது.
Know in Basic Kabaddi rules of tamil click here
லீக் நாக்அவுட் சுற்று முடிவில் நேசம்மாள் முத்தையாபுரம், ஜெயசேகர் முப்புலிவெட்டி, சிவந்தி கிருஷ்ணாபுரம், தந்தை பெரியார் கீழ செய்தலை, AVS புதுக்கோட்டை, தங்கப்பாண்டி பூசனூர், SOUTH FRIENDS தூத்துக்குடி மற்றும் போட்டி நடத்திய அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் போட்டியை நடத்திய உள்ளூர் அணியும் (APR) நேசம்மாள் முத்தையாபுரம் அணியும் மோதின,விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி டை-பிரேக் வரை சென்று கடைசி ஒரு புள்ளியில் கமிட்டி அணி(APR) வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.
👉🏻Know in Basic Kabaddi rules of Tamil click here
இரண்டாவது பரிசை நேசம்மாள் முத்தையாபுரம் அணி பெற்றது.
![]() |
Nesmamayal Kabaddi Team |
Tag: Kabaddi | Tn Kabaddi | Kabaddi News | Tamil Nadu Kabaddi News
0 Comments