Uthangarai Kabaddi Club Kabaddi Match News

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கபடி கிளப் அறக்கட்டளை, கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகத்தோடு இணைந்து நடத்தும் மாபெரும் ஆண்கள் மற்றும்  பெண்கள் கபடி போட்டி அரசு விளையாட்டு மைதானம், ஊத்தங்கரையில்  நடைபெறுகிறது.

இந்த கபடி திருவிழாவில் முதல் போட்டியாக இளையோருக்கான 65 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கபடி போட்டி 28,29/10/2021 மாலை 5 மணிக்கு போட்டிகள் நடைபெறவிருக்கிறது.

Uthangarai Kabaddi Club Kabaddi Match News
வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்க தொகையும் வெற்றி கோப்பைகளும் வழங்கப்படவிருக்கிறது.

அதைத்தொடர்ந்து பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது, 30,31/10/21 சனி, ஞாயிறு நடைபெறும் இந்த போட்டியில் தமிழகத்தின் தலைசிறந்த பெண்கள் கபடி அணிகள் அனைத்தும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Uthangarai Kabaddi Club Kabaddi Match News

இந்த கபடி திருவிழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கபடி கழக நிர்வாகிகள்,தொழிலதிபர்கள், கபடி ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்தப் போட்டியை ஊத்தங்கரை கபடி கிளப் நிர்வாகிகள் P.கிரிதரன் G.கேசவன் A.கோபி A.G.திருவேங்கடம் S.பூவரசன் ஆகியோர் ஒருங்கிணைத்து விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர்.

----------------------------------------------------------------------------------------------------------------------

65Kg ஆண்களுக்கான எடை பிரிப்பு கபடி போட்டியின் முடிவுகள்;

முதல் பரிசை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை யை சேர்ந்த PK ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும்,

இரண்டாம் பரிசை கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை ஸ்போட்ஸ் கிளப் அணியும் 

மூன்றாம் பரிசை கடலூர் மாவட்ட அணியும் மற்றும் ஊத்தங்கரை கபடி கிளப் அணியும் பகிர்ந்து கொண்டனர்.

மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் பரிசு விவரங்கள்;

முதல் பரிசு: தமிழ்நாடு காவல்துறை 
இரண்டாம் பரிசு: PKR காலேஜ் கோபி, ஈரோடு மாவட்டம் 
மூன்றாம் பரிசு:(இரு அணிகளுக்கு) CPR Sports தர்மபுரி & KPR Mills கோயம்புத்தூர்

இந்தப்போட்டியில் வீடியோக்களை GK Sports Kabaddi என்ற யூ டியூப் வலைதளத்தில் கண்டு மகிழலாம்.

Tag: Uthangarai Kabaddi Club | Tamil Nadu Kabaddi News | girls kabaddi match | Krishnagiri District Kabaddi Association

Post a Comment

0 Comments