Pro kabaddi சீசன்-8 லீக் சுற்று முடிவுற்ற நிலையில், பிளே ஆப் சுற்றில் விளையாட கூடிய அணிகள் முடிவாகிவிட்டது.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு முறை மோதின,மொத்தம் 132 போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் ஆறு இடத்தை பிடிக்கும் அணி Playoffs சுற்றுக்கு தகுதி பெறும்,புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.மற்ற நான்கு இடங்களை பிடித்த அணிகள் Eliminator ரவுண்டில் விளையாடி வெற்றி பெறும் இரண்டு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்;
1)Patna Pirates
2)Dabang Delhi K.C.
3)U.P. Yoddha
4)Gujarat Giants
5)Bengaluru Bulls
6)Puneri Paltan
முதல் இரண்டு இடங்களை பிடித்த பாட்னா மட்டும் டெல்லி நேரடியாக அரையிறுதிப் போட்டியில் விளையாடும்,மற்ற 4 அணிகள் எலிமினேட்டர் ரவுண்டில் விளையாடி வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிப் போட்டியில் ஏற்கனவே உள்ள அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும்.
Image credit: Pro Kabaddi official website
தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபநிலை😥
இந்த சீசனில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி முதலில் ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது,சிறந்த டிபன்ஸ் அணி என்று கபடி விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற தமிழ் தலைவாஸ்.
ரைடிங் டிபார்ட்மென்ட்டை சரியாக செலக்ட் செய்யவில்லை,அணிக்கு அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்த பிரபஞ்சன் மற்றும் அஜிக்யா பவர் காயம் அடைந்ததும் தமிழ்தலைவாசில் ரைடர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
மாற்று வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த எம்எஸ்.அத்துல் மற்றும் பவானி ராஜ்புத் பலிக்கவில்லை.
5 வெற்றி, 6டை, 11 தோல்வி என்று 11 ஆவது இடத்தைப் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறியது தமிழ் தலைவாஸ்.
அடுத்து கபடி ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூ மும்பா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளின் கடைசி நேர சொதப்பல்களால் போட்டியிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.
யூ மும்பா அணிக்காக விளையாடிய கரூரை சேர்ந்த V.அஜித்குமார்
20 போட்டிகளில் பங்கேற்று 153 ரைட் பாயிண்டுகளை எடுத்து அசத்தினார்,
புனேரிபல்டன் அணிக்காக விளையாடிய கன்னியாகுமரியை சேர்ந்த அபினேஷ் நடராஜன்43 டிபன்ஸ் புள்ளிகளையும்,ஐசிஎப் அணி வீரர் V.சஜன் சந்திரசேகர் 33 டிபன்ஸ் புள்ளிகளையும் எடுத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
தென்னிந்திய அணிகளான தெலுங்கு டைட்டன் மற்றும் தமிழ் தலைவாஸ் லீக்ஸ் இருந்து வெளியேறிய நிலையில்,பெங்களூர் புல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது கபடி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பெங்களூரு புல்ஸ் அணிக்காக விளையாடும் தமிழகத்தை சேர்ந்த சந்திரன் ரஞ்சித் அவர்கள் 17 போட்டிகளில் பங்கேற்று 83 ரைட் பாயிண்டுகளை எடுத்துள்ளார்.
(புள்ளிகள் விவரம் லீக் சுற்றின் முடிவில்)
Image credit: Pro Kabaddi official website
Eliminator 1↔ U.P. Yoddha VS Puneri Paltan
42 31
U.P. Yoddha Won By 11 Points
➡⬅
Eliminator 2↔ Gujarat Giants VS Bengaluru Bulls 29 49
Bengaluru Bulls Won By 20 Points
➡⬅
Semi-Final 1↔Patna Pirates VS U.P. Yoddha
38 27
Patna Pirates Won By 12 Points
➡⬅ Semi-Final 2↔Dabang Delhi K.C. VS Bengaluru Bulls
40 35
Dabang Delhi K.C. Won By 05 Points
➡⬅ 60 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற புரோ கபடி சீசன்-8 கபடி போட்டியின் இறுதிப் போட்டி பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி 8.30PM மணிக்கு Bengaluru,Whitefield,Sheraton Grand, மைதானத்தில் தொடங்கியது.
பட்னாவின் பலமான டிபண்சை எப்படி? எதிர்கொள்ளப் போகிறது டெல்லி என்று யோசனையில் இருந்தேன்.
அதுவுமில்லாமல் நவீனின் காயம் காரணமாக முழு வேகத்தோடு விளையாடுவாரா என்று எண்ணம் இருந்தது!
அரையிறுதிப் போட்டியில் நடந்தது போல அல்லாமல் ஒரளவுக்காவது டெல்லி ஈடுகொடுத்து ஆடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் என் எண்ணங்களுக்கு மாறாக டில்லி அணியின் ரைடர் நவினும், விஜயும் பட்னா அணியின் டிபாண்சை துக்கு நூறாக உடைத்தெறிந்து வெற்றி மகுடத்தை பறித்தனர்.
#வாழ்த்துகள்_டில்லி 💐💐💐
-Admin
Final↔Patna Pirates VS Dabang Delhi K.C.
36 37
Dabang Delhi K.C. Won By 01 Point
Dabang Delhi K.C.
TAGS: Pro Kabaddi | Pro Kabaddi Playoffs For Season 8 | தமிழ் தலைவாஸ் | புரோ கபடி செய்திகள் | U MUMBA | புனேரிபல்டன்
All India University kabaddi match 2022 Maharshi Dayanand University, ROHTAK
Kabaddi referee exam Tamil Nadu
தமிழகத்தில் நடைபெறும் கபடி போட்டிகளில் (TNAKA) கபடி நடுவர்களாக பணியாற்ற, அமெச்சூர் கபடி கழகத்தால் அவ்வப்போது கபடி நடுவர்களுக்கான பயிற்சியும், தேர்வும் நடத்தப்படுகிறது.
GK Sports Kabaddi Live Streaming
உங்கள் ஊரில் நடைபெறும் கபடி திருவிழாவை உலகம் காண எங்களை அழையுங்கள்! Call: 8300682180
0 கருத்துகள்