பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மிக பிரம்மாண்டமான அளவில் நடத்தப்படும் கபடி போட்டியான "மோடி கபடி லீக்" போட்டியானது, மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள மதுரா கல்லூரியில் நடைபெறுகிறது.
27/09/22 முதல் 29/07/22 வரை மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ஏற்கனவே மாவட்ட போட்டிகளில் விளையாடி தேர்வு பெற்ற அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. பாரதிய ஜனதா கட்சி ரீதியான 60 மாவட்டங்கள் இந்த போட்டியில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Modi Kabaddi League Tamil Nadu |
இதுவரை தமிழக கபடி உலகம் கண்டிராத மிகப் பெரிய பரிசு தொகையான முதலிடத்தை பெறும் அணிக்கு ரூபாய் 15 லட்சமும், இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு ரூபாய் 10 லட்சமும், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பெறும் அணிகளுக்கு ரூபாய் 5 லட்சமும் ரொக்கமாக வழங்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தங்கள் கட்சி கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 60 மாவட்டங்களில் மோடி கபடி லீக்(MKL) என்ற பெயரிலேயே, மாவட்ட போட்டிகளை நடத்தி அதிலிருந்து சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அந்தந்த மாவட்ட பெயரிலேயே மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டியின் விதிமுறையாக 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகவும் 85 கிலோ எடைக்கு உட்பட்டவராகவும், அந்தந்த தொகுதியை சேர்ந்த வீரர்களாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தி பேசிய மாநில தலைவர் திரு.அண்ணாமலை Ex IPS அவர்கள் கிராமங்களில் இருக்கும் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்தி தேசிய அளவில் அவர்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள் என்று தெரிவித்தார்.
கோப்பை அறிமுக விழா |
மாநிலப் போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் கபடி அணியின் வீரர்கள் பாரத பிரதமரின் கரங்களால் பரிசுகளை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Modi Kabaddi League Final Match Video
Tags: Modi Kabaddi League | Modi Kabaddi League Tamil Nadu | Modi Kabaddi | Tamil Nadu Kabaddi News | MKL |
0 Comments