48th Boys Junior National Kabaddi Championship-2022
நாற்பத்தி எட்டாவது ஜூனியர் நேஷனல் கபடி போட்டியானது நவம்பர் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் மாவட்டம் ஹிரிதுவார் Pantdeep மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியை தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு ஜூனியர் சேம்பியன்ஷிப் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நடைபெற்றது.இதில் தமிழகத்தின் 38 மாவட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடினர்.இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடிய முப்பதுக்கு மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்கட்டமாக மதுரையில் பயிற்சி அளிக்கப்பட்டனர்.
இரண்டாவது கட்டமாக சேலம் மாவட்டம், தாழையூரில் உள்ள சாமியப்பா அகடமியில் பயிற்சி அளிக்க பட்டனர்.இந்த பயிற்சி பட்டறையில் சிறப்பாக தன் திறமையை வெளிப்படுத்திய 12 வீரர்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டனர்.இந்த 12 வீரர்கள் தமிழகத்தின் சார்பாக ஜார்க்கண்டில் நடைபெறும் ஜூனியர் கபடி போட்டியில் பங்கேற்கின்றனர்.
வீரர்களின் விவரம்;
- சூர்யா, சென்னை
- முகேஷ் கண்ணா, சேலம்
- வைகை வேந்தன், கடலூர்
- சரவணன், மதுரை
- ஹரிஷ், ராமநாதபுரம்
- அன்சாரி, சிவகங்கை
- மாரி, திருச்சி
- கிருஷ்ணா, சேலம்
- ராம்குமார், விருதுநகர்
- ரஞ்சித், திருநெல்வேலி
- சக்திவேல், தூத்துக்குடி
- பெர்ஜின், கன்னியாகுமரி
![]() |
Tamil Nadu Junior Kabaddi Team |
48th Junior National Kabaddi Championship Boys | Players profile | Tamil Nadu Junior Kabaddi Team
0 கருத்துகள்