இந்தியாவில் புகழ்பெற்ற கபடி போட்டிகளில் ஒன்றான யுவா கபடி சீரியஸ்(YUVA KABADDI SERIES) அடுத்து பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது.நவம்பர் 27-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தமிழகத்தின் சார்பாக கபடி அணி தேர்வு செய்யப்பட்டு, இந்த போட்டியில் பங்கேற்க அனுப்பப்படுகிறது.
![]() |
Yuva Kabaddi Series Pondicherry |
இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பு பின்வருமாறு...
பாண்டிச்சேரியில் நடைபெற உள்ள யுவா கபடி சீரியஸ் லீக் போட்டியில் இந்தியாவின் 10 மாநிலங்கள் பங்கேற்கின்றன. தமிழகத்தின் சார்பாக பங்கேற்கும் வீரர்கள் தேர்வு சேலம் மாவட்டம் தாழையூர், சங்ககிரி சாமியப்பா அகடமியில் 15,11,2022 அன்று நடைபெற உள்ளது.
வீரர்களின் எடை 80 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும், வயது இருபத்தி மூன்றுக்குள் இருக்க வேண்டும். அதாவது 01/01/2000 பின் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இந்தப் போட்டியின் முழு விபரங்களும் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்களின் மாவட்ட கபடி கழகங்களை தொடர்பு கொள்ளவும்.
இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, சிறந்த எதிர்காலம் உள்ளதால் தகுதியுள்ள வீரர்கள் அனைவரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி கபடி வளர்ச்சியில் பங்கேற்கவும்.
Yuva kabaddi series lineup | YUVA KABADDI SERIES | Yuva Kabaddi Series Tamilnadu Kabaddi Players
0 கருத்துகள்