Ad Code

Pro Kabaddi season 8 Tamil Thalaivas dream team

Pro Kabaddi season - 8 - a dream team for Tamil Thalaivas
---------------------------------------------------------------------------

ஒவ்வொரு கபடி வீரனின் லட்சியமும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும், புரோ கபடியில் விளையாட்டு விளையாட வேண்டும் என்பதாகவே இருக்கும்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தின் வீர விளையாட்யான கபடியில், தமிழக வீரர்கள் சாதிக்க வேண்டுமென்ற துடிப்பு அதிகமாகவே இருக்கும்.
 இந்திய அளவிலும், உலக அளவிலும் பல தமிழக வீரர்கள் கபடியில் புகழ் பெற்றுள்ளனர்.

புரோ கபடியில் தமிழக வீரர்களின் பங்கு மிக சிறப்பானது,குறிப்பாக சந்திரன் ரஞ்சித், பிரபஞ்சன், சேரலாதன், செல்வமணி, கரூர் அஜித் குமார், அருண், செல்வம் மற்றும் சுபாஷ் போன்றவர்களின் பங்களிப்பு அபரிதமானது.

இவர்கள் அனைவரும் தாங்கள் சார்ந்திருந்த அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாய்ப்பை தேடி கொடுத்தனர்.ஆனால் தமிழகத்தின் பெயரில் இருக்கும் "தமிழ் தலைவாஸ்" அணி தான் ஒவ்வொரு வருடமும் தள்ளாடுகிறது.
Pro-Kabaddi-season-8-dream-team-Tamil-Thalaivas


தமிழக கபடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிராசை ஆக்கிக் கொண்டிருக்கும் தமிழ் தலைவாஸ் அணி ,எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில் இந்த கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழக கபடி ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு! தமிழ் தலைவாஸ் அணியில் தமிழக வீரர்கள் சந்திரன் ரஞ்சித், சேலம் பிரபஞ்சன், ரயில்வே அணிக்கு வலுசேர்த்துக்கொண்டிருக்கும் சேரலாதன்,  சென்ற வருடம்  தமிழ் தலைவாஸ் அணியை  உயர்த்திப் பிடித்த கரூர்  அஜித் , சாந்தப்பன் செல்வம் போன்றவர்கள் தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற வேண்டும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேபோல தமிழக அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருக்கும் கரூர் ராதாகிருஷ்ணன், கடலூர் பாரிவள்ளல்,சேலம் ராம், முனியப்பன், அளத்தங்கரை அபிஷேக்
அல்லூர் பிரபாகரன்(தற்போது இவர் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சையில்  உள்ளார்) போலீஸ் அணி பிரவீன் போன்றவர்களும் தமிழக அணியில் இடம் பெற வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

PKL 2020 Auction Format;

NYP விதிமுறைப்படி 6 வீரர்களை தமிழ் தலைவாஸ் தக்க வைத்துக் கொள்ள முடியும், FKHP விதிமுறைப்படி மூன்று இளம் வீரர்களை தேர்ந்தெடுக்க முடியும்.தக்கவைத்துக்கொண்ட வீரர்களையும் புதிதாக தேர்வு செய்த இளம் வீரர்களின் பட்டியலையும் மார்ச் மாதத்திற்குள் தமிழ் தலைவாஸ் அறிவிக்கும்.

வரவிருக்கும் ஏலத்தில் FKHP 2020 மூலம்  அதிகபட்சம் ஆறு NYP களுக்கு அணிகள் ஏலம் எடுக்க முடியும் என்பதால் அதிக இளம் வீரர்களை களத்தில் இறக்குவதில் அணிகள் கவனம் செலுத்துவார்கள்.

அடுத்து  வரவிருக்கும் சீனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியும்  உலக கோப்பை கபடி போட்டியும், புரோ கபடிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Pro-Kabaddi-season-8-dream-team-Tamil-Thalaivas


குறிப்பு: இந்தக் கட்டுரையானது தமிழக வீரர்கள் தமிழ் தலைவாஸ் அணியில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டது, இதில் வெளிமாநில வீரர்களும், வெளிநாட்டு வீரர்களும் கருத்தில் கொள்ளப்படவில்லை.

புரோ கபடியில் வீரர்கள் எப்படி வாய்ப்பு பெறுவது என்பதை பற்றிய விரிவான கட்டுரை நம்முடைய இணைய தளத்தில் உள்ளது படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Tag: pro kabaddi| pro kabaddi season-8 | Tamil thalaivas kabaddi team | pkl-8, Tamil thalaivas kabaddi players | Tamil thalaivas squad 2020 | Tamil thalaivas team 2020 | புரோ கபடி 2020

                           Pro Kabaddi Tamil Thalaivas Ajith Kumar


 Tamil Thalaivas Ajith Kumar

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Kalidasan இவ்வாறு கூறியுள்ளார்…
https://www.gkkabaddi.com/2020/01/pro-kabaddi-season-8-tamil-thalaivas-kabaddi-team.html