கபடி அழைப்பிதழில் இருக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்;
கபடி நோட்டிசில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய தகவல்கள்;
2)தாலுக்கா,
3)கபடி கழக பதிவு எண்&கபடி போட்டி நடத்த கபடி கழகத்தின் அனுமதி பெறும் போது கொடுக்கும் ரசீது எண்,
4)எடை பிரிவு அல்லது Open Match என்று தெளிவாக கூறிப்பிடவும்,
5)கமிட்டி மொபைல் எண்(போட்டி நடக்கும் விழா குழுவின் முக்கிய நபர்களின் மூன்று எண்கள் ஆகுது நோட்டீசில் குறிப்பிடவேண்டும்)
6)பஸ் வழித்தடம் மற்றும் பஸ் எண்;
நகரத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும் கிராமங்களில் கபடி போட்டி நடத்தும் விழா குழுக்கள், நகரத்திலிருந்து கிராமத்தை இணைக்கும் ரயில், பேருந்து எண், பேருந்து தடம் மற்றும் தனியார் ஆட்டோ டாக்ஸி வசதி இருந்தால் அதையும் நோட்டீசில் குறிப்பிட்டால் வரும் கபடி அணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
7)போட்டி நடத்தும் தேதி மற்றும் சரியான நேரம்,
8)முன்பதிவு தேதி மற்றும் நுழைவு கட்டணம்:
முன்பதிவு தேதியை தவறாமல் குறிப்பிட வேண்டும் நுழைவு கட்டணம் செலுத்த இணையதள வசதி இருந்தால் அதையும் குறிப்பிடவும் எடுத்துக்காட்டாக google pay, phone pay,upi, Bank Account.
9)பயணச் செலவு;
கபடி அணிகள் விழா நடத்தும் கமிட்டியிடம் முக்கியமாக எதிர்பார்ப்பது பயணச்செலவு (பஸ் பேர்)
சில விழா குழுக்கள், கபடி அழைப்பிதழில் பயணச் செலவு விவரங்களை குறிப்பிடுவார்கள்,அணிகளின் தகுதிக்கேற்ப பயணப்படி கொடுத்தால் நன்றாக இருக்கும்.
10)உணவு மற்றும் தங்குமிட வசதிகளையும் குறிப்பிடலாம்.
போட்டிக்கு செல்லும் முன் கபடி அணிகள் கவனிக்க வேண்டியவை;
1)கபடி போட்டி நடத்தும் விழா குழு, கபடி கழகத்திடம்(AKFI) அனுமதி பெற்று உள்ளார்களா என்பதை கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்,
2)காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று கபடி போட்டி நடக்கிறதா என்பதை உறுதிசெய்வது கொள்வதோடு, கபடி கழக நடுவர்கள் தான் நடுவர்களாக பணியாற்றுவார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்,
4)போட்டி நடக்கும் மாவட்டத்தின் கபடி கழக (AKFI) தலைவர் மற்றும் செயலாளர் மொபைல் எண்களை குறித்து கொள்ளவும்,
கபடி போட்டியில் உங்களுக்கு ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில் நீங்கள் முதலில் கபடி கழகத்தின் நடுவர்களை நாடலாம் அல்லது கபடி அழைப்பிதழுடன் சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.
Know in Basic Kabaddi rules of tamil click here
--------------------------------------------------------------
Tamilnadu Kabaddi, Kabaddi Notice, Kabaddi Potti, Kabaddi Match,கபடி விளையாட்டு விதிமுறைகள், kabaddi notice model, kabaddi invitation tamil,images for Kabaddi Invitation.
--------------------------------------------------------------------------------------
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்து பெட்டியில் பதிவிடவும்,கபடி சார்ந்த உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்கலாம்,
கபடி நிபுணர்களிடம் அதற்கான பதிலை பெற்று பதிவிடப்படும்.
எங்களை தொடர்புகொள்ள:+918300682180(whatsapp only)
0 கருத்துகள்