Madurai Y-Othakadai Kabaddi Match Live Update...!
கபடி போட்டியை தமிழ்நாடு மாநில அமேச்சூர் கபடி கழக தலைவர் திரு.சோலை ராஜா அவர்கள் தலைமையேற்று நடத்துகிறார்.
![]() |
Image Credit:Othakadai Bhoopathy |
நாள் 15,16,17-01-2021 வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் கபடி போட்டியில் சினிமா பிரபலங்கள் "பரோட்டா M.சூரி, கஞ்ச கருப்பு,ரோபோ சங்கர்,விஜய் டிவி புகழ் ராமர்,நாஞ்சில் விஜயன்,நடிகர் சௌந்தர்ராஜன் பிக்பாஸ் புகழ் Shakshi மற்றும் இயக்குனர் அமீர்" ஆகியோர் கலந்துகொள்ள உள்ளார்கள்.
சிறப்பு அழைப்பளார்களாக இந்திய கபடி அணி வீரரும்,தடுப்பாட்டத்தில் உலக புகழ் பெற்றவரும் அனைவராலும் அண்ணா என்று அழைக்கப்படும் திரு.சேரலாதன் அவர்களும் இந்திய கபடி அணி மற்றும் தமிழ் தலைவாஸ் முன்னால் பயிற்சியாளர் திரு.பாஸ்கரன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
![]() |
Image Credit :Othakadai Bhoopathy |
சிறப்பு அழைப்பளாரக தமிழ்நாடு வீர விளையாட்டு பேரவை தலைவர் திரு.டாக்டர் P.ராஜசேகரன் அவர்கள் கலந்து கொள்கிறார்.
![]() |
Image Credit :Othakadai Bhoopathy |
யா.ஒத்தக்கடை கபடி போட்டியை பற்றிய கண்ணோட்டம்:-
ஆண்,பெண் இருபாலருக்கும் சரி சமமான பரிசு தொகையை கொண்டு நடத்தபடும் வெகு சில கபடி போட்டிகளில் யா.ஒத்தக்கடை கபடி போட்டியும் ஒன்று,
ஆண் கபடி அணியில் அழைப்பு அணிகளாக 16 அணிகளும், தேர்வு அணிகளாக (பதிவு செய்யும் அணிகள்) 16 அணிகளும் மொத்தம் 32 ஆண்கள் கபடி அணிகள் பங்கேற்கின்றன.
பெண்கள் கபடி அணிகள் 16 மட்டுமே.
முதல் பரிசை பெறும் ஆண் பெண் இரு கபடி அணிகளுக்கும் தலா 200001 ரூபாய் ரொக்க பரிசாகவும் மற்றும்
30,000 மதிப்புள்ள வெற்றிக்கோப்பையும் இரண்டு அணிகளுக்கும் வழங்கபடுகிறது.
இறுதி போட்டியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் இரு அணிகளுக்கும்(ஆண்கள்,பெண்கள்) தலா 1,00,000 ரூபாயும்,20 ஆயிரம் மதிப்புள்ள வெற்றிக்கோப்பையும் வழங்கபடுகிறது.
அரையிறுதி போட்டியில் வெற்றி வாய்ப்பை இழக்கும் நான்கு அணிகளுக்கும் தலா 30,000 ரூபாயும்,15 ஆயிரம் மதிப்புள்ள வெற்றிகோப்பையும் வழங்கபடுகிறது.
தென்னிந்திய அளவிளான போட்டி என்பதால் கேரளா,ஆந்திரா,பாண்டிச்சேரி,தெலுங்கான மற்றும் கர்நாடகா மாநிலங்களின் தலைசிறந்த கபடி அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கும்.
இந்த கபடி போட்டியின் நேரலை (Live) காட்சிகளை Youtube மற்றும் Facebook வலைதளங்களில் காணலாம்.
(ஒளிபரப்பாகும் சேனலின் LINK இந்த இடத்தில் Update செய்யப்படும்)
![]() |
Image Credit :Othakadai Bhoopathy |
சென்ற ஆண்டு நடைபெற்ற யா.ஒத்தகடை பெண்கள் கபடி போட்டியில் Alva's மங்களூர் கர்நாடகா அணியும் ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ் திருப்பூர் அணியும் இறுதி போட்டியில் பங்கேற்றன,
தமிழக கபடி வீரங்கனைகள் மோகனா மற்றும் சத்யபிரியா ஆகியோரின் அபரமான ஆட்டத்தால் ஜெயசித்ரா கார்மெண்ட்ஸ் சேம்பியன் பட்டத்தை தட்டிசென்றது.
ஆண்கள் கபடி போட்டியில் ICF சென்னை அணியும் Tamilnadu Postal அணியும் மோதினர்.
அபாரமாக விளையாடி சென்ற வருடம் இன்கம்டாக்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது நினைவிருக்கலாம்.
LAST YEAR MATCH
TAG: KABADDI NEWS, MUDURAI KABADDI, Y-OTHAKKADAI KABADDI MATCH,
இந்தப் போட்டியானது மழையின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மழையின் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட மதுரை ஒத்தக்கடை கபடி போட்டிகள் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது,விழாக் குழுவின் அறிவிப்பின்படி மே 28-ஆம் தேதி தொடங்கி மே-30 வரை மூன்று நாட்கள் இந்த கபடி போட்டி நடைபெறும்.
0 Comments