Ad Code

Tamilnadu Amateur Kabaddi Association New Rules-2021

Tamilnadu Amateur Kabaddi Association New Rules-2021

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் 2021-ம் ஆண்டுக்கான புதிய கபடி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது,இந்த விதிமுறையானது கபடி போட்டிகளை நடத்துபவர்களுக்கும்,கபடி வீரர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் இங்கு தொகுத்தளிக்கிறோம்.

Tamilnadu Amateur Kabaddi Association New Rules 2021
Image Credit: TNAKA
விதிமுறைகள்:

மாவட்ட போட்டி-District Kabaddi Match
மாவட்ட போட்டி என்றால் "அந்த மாவட்டத்தில் உள்ள கபடி அணிகள் மட்டுமே பங்கு பெற வேண்டும்,வீரர்களின் எடை 85 கிலோவிற்குள் இருக்க வேண்டும்,பதிவு கட்டணம் 500 ரூபாய்.

மாநில போட்டி-State Kabaddi Competition
தமிழகத்தில் உள்ள அனைத்து கபடி அணிகளும் பங்கு பெறலாம் எடை 85 Kg,பதிவு கட்டணம் ரூ.1000  (போட்டி பதிவு கட்டணம்:500, அணியின் பதிவு கட்டணம்:500)
எடை இல்லாத மாநில போட்டிக்கு ரூ.5000 ஆயிரம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

தென் மாநில அளவிளான கபடி போட்டி-South India Kabaddi Tournament

தென்னிந்திய அளவிளான கபடி போட்டியில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,பாண்டிச்சேரி,ஆந்திரா மற்றும் தெலுங்கனா மாநில அணிகள் பங்கேற்கமுடியும் (கோவா அணிக்கு அனுமதியில்லை) போட்டி பதிவு கட்டணமாக ரூ.10,000 செலுத்த வேண்டும்,வீரர்களுக்கு எடை கிடையாது.

அகில இந்திய கபடி போட்டி-All India Kabaddi Tournament

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அணிகளும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்,பதிவு கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும்,
வீரர்களுக்கு எடை கிடையாது,ஒரு வீரர் இரு அணிகளில்(தாய்,சேய்) பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறையும் பொருந்தாது,செட்டீங் கபடி அணி பங்குபெற முழு அனுமதி உண்டு.

கபடி போட்டிகளை நடத்துபவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:-

கபடி போட்டி நடத்துபவர்கள், அந்தந்த மாவட்ட கபடி கழகத்திடம் மற்றும் காவல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

ஒரு நாள் கபடி போட்டி நடத்தும் விழா குழுவினர் போட்டியை இரவு 10 மணிக்கு துவங்க வேண்டும்,இரவு 12-மணிக்குள் வரும் அணிகளை மட்டுமே போட்டிக்கு அனுமதிக்க வேண்டும். குறைவான அணிகள் வந்திருந்தால் போட்டிகளை லீக் (League match)முறையில் நடத்தலாம்.

ஒரு நாள் கபடி போட்டிக்கு முதலில் வரும் 40 அணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்,கபடி போட்டியை நடத்துவதற்கு குறைந்தது 6 TNAKA  நடுவர்கள் இருக்க வேண்டும்.

AKFI விதிமுறைபடி ஆண்கள் 55,70,85 எடை பிரிவிலும், பெண்கள் 55,65,75 எடை பிரிவில் மட்டுமே போட்டிகள் நடத்த வேண்டும்.

போட்டி அட்டவணையை விழா குழுவும்,TNAKA நடுவர்களும் கலந்தலோசித்து தயார் செய்ய வேண்டும்.போட்டி எடை பிரிவில் நடைபெற்றால் எடை போடும் உரிமையை நடுவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அகில இந்திய மற்றும் மாநில அளவிளான போட்டிகளில் பங்கேற்கும் கபடி அணிகளுக்கு 12+2 என்ற அளவில் 14 நபர்களுக்கு போக்குவரத்து செலவு தொகை வழங்க வேண்டும்.


கபடி வீரர்களுக்கான விதிமுறைகள்:-

கபடி அணிகள் அந்தந்த மாவட்ட கபடி கழகத்தில் பதிவு செய்ய வேண்டும்,அணிகளின் பதிவு கட்டணம் ரூ.1000 , ஒரு அணிக்கு 16 நபர்கள் விதம் ID கார்டுகளை பெற்று கொள்ளலாம்.

ஒரு விளையாட்டு வீரர் இரு அணிகளில் (தாய்,சேய்) விளையாட வேண்டும்,விளையாடும் அணிகளின் பெயரை அணிகளின் பதிவின் போது வீரர்கள் தெரிவிக்க வேண்டும்.
ஒரு வீரர், "இரு அணிகளை தவிற" மூன்றாவது அணிக்கு விளையாடுவது கண்டுபிடிக்கபட்டால் 6 மாதங்களுக்கு அந்த வீரர் போட்டிகளிலிருந்து தடை செய்யபடுவார்.

வருடத்திற்கு ஒரு முறை கபடி அணிகள் தங்களின் பதிவை புதுபிக்க வேண்டும்.

போட்டியின் போது நடுவர்களின் தீர்ப்பு எதிராக செயல்படும் வீரரையோ அல்லது அணியையோ விளையாட்டு போட்டிகளிலிருந்து குறைந்தது 6 மாதங்களுக்கு தடை செய்யபடுவார்கள்.

மாவட்ட மற்றும் மாநில சேம்பியன்ஷீப் போட்டியில் பங்கேற்கும் வீரர் வீரங்கனைகளின் தகுதிகள்:-
ஆண்கள் பிரிவு,
SUB JUNIOR- 55KG வயது 16
JUNIOR - 70 KG வயது 19
SENIOR - 85 KG வயது வரம்பு இல்லை

பெண்கள் பிரிவு,
SUB JUNIOR-55KG வயது 16
JUNIOR-65 KG வயது 20
SENIOR-75KG வயது வரம்பு இல்லை

கபடி விதிமுறைகளை(Basic kabaddi rule)பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Tag: kabaddi | kabaddi news | Tamilnadu kabaddi | kabaddi rule | gk kabaddi |Tamilnadu Amateur Kabaddi Association New Rules-2021

கருத்துரையிடுக

0 கருத்துகள்