தமிழகத்தில் நடைபெறும் கபடி போட்டிகளில் (TNAKA) கபடி நடுவர்களாக பணியாற்ற, அமெச்சூர் கபடி கழகத்தால் அவ்வப்போது கபடி நடுவர்களுக்கான பயிற்சியும், தேர்வும் நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் மேற்பார்வையில் அந்தந்த மாவட்ட கபடி கழகங்கள் இந்த தேர்வை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து அறிவிப்பை வெளியிடுகின்றன.
image credit: Pro Kabaddi |
கல்வித்தகுதி;
மாநில நடுவராக பணியாற்ற குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,தேசிய நடுவராகவோ அல்லது சர்வதேச நடுவராகவோ பணியாற்ற தங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப அடுத்த கட்ட தேர்வு எழுதி தகுதி பெறலாம்.
வயது வரம்பு;
நடுவர் தேர்வு எழுத வயது வரம்பு இல்லை ஆனால் குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
தேர்வு எழுது கொண்டு வரவேண்டிய முக்கிய பொருட்கள்;
- 10th மார்க் சீட் அல்லது TC[குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாவது தேர்ச்சி, அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்]
- விளையாட்டு விசில்-sports whistle
- கை டைமர்-Stop Watch
- பேனா, பென்சில், அளவு கோல்,மார்கர்-pen pencil scale Markar
தேர்வு கட்டணம்;
தேர்வு கட்டணம் அந்தந்த மாவட்டங்களை பொருத்து வேறுபடும்,கபடி கழகத்தால் வெளியிடப்படும் அறிவிப்புகளில் தேர்வு கட்டணம் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
கபடி கழக தகவல்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
பயிற்சி வகுப்பு;
கபடி பயிற்சியில் முதலில் கபடி மைதானத்தின் அளவுகள் மற்றும் கபடி விதிமுறைகள், போட்டி அட்டவணை(fixture) தயாரிக்கப்படும் முறைகள் கற்பிக்கப்படுகின்றன,அடுத்த கட்ட பயிற்சியில் நடுவர்களின் சைகைகள்(Hand signal) கற்பிக்கப்படுகின்றன.
indoor practice |
நேர்முகத் தேர்வு;
Indoor பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன் நேர்முக தேர்வு நடைபெறுகிறது,இந்த தேர்வில் கபடி மைதானம் சம்பந்தமான கேள்விகளும் மற்றும் கபடி விதிமுறைகள் கேள்விகள் இடம்பெறுகின்றன.இந்த தேர்வுக்கு 1 முதல் 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
Interview |
நடைமுறை தேர்வு-practical exam ;
கபடி மைதானத்தில் இரு கபடி அணிகள் களம் இறக்கப்பட்டு முதலில் கை சைகைகள் மற்றும் தீர்ப்பு எப்படி வழங்க வேண்டும் என்று நேரடியாக கற்பிக்கப்படுகிறது,களப்பயிற்சி முடிந்தவுடன் அது சம்பந்தமான பிரக்டிகல் கேள்விகள் கேட்கப்படும், சைகை, விசில்,டைமர் மற்றும் கபடி மைதான விதிமுறை கேள்விக்கு உண்டான பதிலுக்கு ஏற்ப 1 முதல் 90 மதிப்பெண்கள் வரை வழங்கப்படுகிறது.
practical exam |
Theory exam-கோட்பாடு தேர்வு;
கபடி நடுவர்களாக பணி செய்ய விரும்புவர்களுக்கு மிகவும் முக்கியமான கட்டும் இந்த தேர்வு,அதிகபட்ச மதிப்பெண் 100க்கு உண்டான கேள்வி வினாத்தாள்கள் கொடுக்கப்படும்,பீச் கபடி உட்பட கபடி சம்பந்தமான அனைத்து கேள்விகளும் இந்த வினாத்தாளில் இடம்பெற்றிருக்கும்.
தேர்வு எழுத இரண்டு மணி நேரம் தரப்படுகிறது,சில கேள்விகளுக்கு கேள்வித் தாளிலும் சில கேள்விகளுக்கு வெள்ளைத்தாளிலும் பதில் எழுத வேண்டும்.
கேள்வித்தாளில் கேள்விகள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும்,பதிலை நாம் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அல்லது இரண்டு மொழிகளில் கலந்தும் எழுதலாம்.
அனைத்து மட்டங்களிலும் தேர்வு பெறும் நபர்களுக்கு அமேச்சூர்(TNAKA) கபடி கழகத்தால் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
Tag: Kabaddi referee exam | Tamil Nadu Kabaddi referee exam | கபடி நடுவர் தேர்வு |How do I become a professional referee in Kabaddi?
7 Comments
வருடத்திருக்கு ஒரு முறை நடக்குமா இதற்க்கு வகுப்பு irukkiratha