Ad Code

36th National Games Kabaddi Gujarat 2022

36-வது தேசிய விளையாட்டு கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் EKA Arena பல்நோக்கு அரங்கில் நடைபெறுகிறது.68-வது சீனியர் நேஷனல் கபடி போட்டியில் முதல் 8 இடங்களை பிடித்த கபடி அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன.கடந்த போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த துறை அணியான இந்தியன் ரயில்வே தவிர்த்து, அந்த இடத்தில் இந்தப் போட்டியை நடத்தும் குஜராத் மாநிலம் பங்கேற்கிறது.

செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 1-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்  தமிழக அணிகள் (இரண்டு பிரிவிலும்) தகுதி பெற்றுள்ளது.அறுபத்தி எட்டாவது சீனியர் நேஷனல் போட்டியில் பங்கேற்ற தமிழக அணிகளில் சிறிய மாற்றங்களுடன் இந்த போட்டியில் தமிழக அணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஆண்கள் கபடி அணி வீரர்களின் விவரங்கள்;

  • சந்திரன் ரஞ்சித் 
  • அபினேஷ் நடராஜன் 
  • சஜன் சந்திரசேகர் 
  • M.அபிஷேக் 
  • சாந்தப்பன் செல்வம் 
  • ராம்குமார் 
  • கார்த்திக் 
  • மாசானமுத்து 
  • நாகமணி 
  • முத்துவேல் 
  • இளவரசன்
  • V.விஸ்வாந்த் 
36th National Games Kabaddi Gujarat 2022
Image Credit: Kabaddi 360

பெண்கள் கபடி அணியின் விவரங்கள்;

  • பவித்ரா இந்திரஜித் 
  • சத்திய பிரியா 
  • R.ஆஷா 
  • K.சுவேதா 
  • B.சித்ரா
  • D.வினோதினி 
  • M.ராஜேஸ்வரி 
  • T.சந்தியா 
  • T.மாலா 
  • K.தீபா 
  • K.அனிதா 
  • S.காவியா
36th National Games Kabaddi Gujarat 2022
Image Credit: Kabaddi 360

இந்த போட்டியின் நேரலை YOUTUBE தளத்தில் நேரடி ஒளிபரப்பகிறது. நேரடி ஒளிபரப்பை காண இங்கே கிளிக் செய்யவும். மற்றும் சேட்டிலைட் சேனலான DD SPORTSயிலும் இந்த போட்டியை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

போட்டி அட்டவணை;

36th National Games Kabaddi Fixture
36th National Games Kabaddi Fixture

36th National Games Kabaddi Fixture
36th National Games Kabaddi Fixture

போட்டியின் முடிவுகள்;

36-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் ஆண்கள் கபடி போட்டியில் முதல் இடத்தை  உத்தர பிரதேசம் (UP) மாநில கபடி அணியும் இரண்டாவது இடத்தை  மகாராஷ்டிரா(MDH) மாநிலமும், மூன்றாம் இடத்தை முறையாக சர்வீஸ்(SERVICE) அணியும் ஹாரியானா(HR) மாநில அணியில் பெற்றது.

பெண்கள் கபடி போட்டியில் முதலிடத்தை இமாச்சல் பிரதேசம்(HP) மாநில அணியும் இரண்டாமிடத்தை மகாராஷ்டிரா(MDH) மாநில அணியும் மூன்றாம் இடத்தை தமிழ்நாடு (TN)மாநில அணியும் மற்றும் அரியானா(HR) அணியும் பெற்றது.

Tags: 36th National Games | 36th National Games Kabaddi Gujarat 2022 | Tamil Nadu Kabaddi

கருத்துரையிடுக

0 கருத்துகள்