Ad Code

Pro Kabaddi season 10 ஒரு பார்வை

 ப்ரோ கபடி லீக் (PKL) அமைப்பாளர்களான மஷால் ஸ்போர்ட்ஸ், மைல்கல்லான புரோ கபடி லீக் சீசன் 10 வீரர்கள் ஏலம் 2023 செப்டம்பர் 8 முதல் 9 வரை மும்பையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.9 சீசன்களுக்குப் பிறகு ஒவ்வொரு உரிமையாளருக்கும் அவர்களின் அணிகளுக்குக் கிடைக்கும் மொத்த சம்பள பர்ஸ் 4.4 கோடி ரூபாயில் இருந்து 5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது .(அதாவது வீரர்களை வாங்கக்கூடிய ஏலத்தொகையானது இந்த வருடம் 60 லட்ச ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் பயனாக கூடுதல் வீரர்களை ஏலத்தில் கோர முடியும் அது மட்டும் இல்லாமல் பிடித்த வீரர்களை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது)


Pro Kabaddi season 10 ஒரு பார்வை

இந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் சேர உள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள்: பிரிவு A, B, C மற்றும் D. வீரர்கள் ஒவ்வொரு பிரிவிற்குள்ளும் 'ஆல்-ரவுண்டர்கள்', 'டிஃபென்டர்கள்' மற்றும் 'ரைடர்கள்' என மேலும் உட்பிரிவு செய்யப்படுவார்கள். வகை A - INR 30 லட்சம், வகை B - INR 20 லட்சம், C வகை - INR 13 லட்சம், மற்றும் D வகை - INR 9 லட்சம் என ஒவ்வொரு வகைகளுக்கும் அடிப்படை விலைகள் உள்ளன.

Pro Kabaddi League கொள்கைகளின்படி அந்தந்த PKL சீசன் 9 அணிகளில் இருந்து வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் விருப்பம் franchises அணிகளுக்கு உள்ளது. ஒவ்வொரு பிகேஎல் சீசனிலும் நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் எலைட் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் வகைப்பாட்டின் கீழ் ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள உரிமையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மும்பையில் நடைபெறும் இரண்டு நாள் ஏலத்தின் போது, ​​உரிமையாளர்களால் தக்கவைக்கப்படாத மற்றும் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள்,ஏலத்தின் கீழ் செல்வார்கள். 


2023 கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு வந்த இரண்டு அணிகளைச் (Chandigarh University,Guru Kashi University) சேர்ந்த 24 வீரர்கள் ஏலக் குழுவில் சேர்க்கப்படுவார்கள். 


இதுவரை கிடைத்த தகவலின்படி பெங்கால் வாரியர்ஸ் R. குகன் 

பாட்னா பைரேட்ஸ்  தியாகராஜன் யுவராஜ், சஜன் சந்திரசேகர்

ஜெய்ப்பூர் பிங்க் பேன்தர்ஸ் V.அஜித் குமார் 

புனேரி பல்டன் அபினேஷ் நாடராஜன்

தமிழ் தலைவாஸ் M.அபிஷேக் ஆகிய தமிழக வீரர்களை Retain செய்துள்ளது அவர்கள் சார்ந்த அணிகள். 

Pro Kabaddi Season Ten,12 அணிகளிலும் இதுவரை ரிட்டைன் செய்யப்பட்ட வீரர்களின் முழு விவரங்கள்;

Team Elite Retained Players Retained Young Players Existing New Young Players
Bengal Warriors Ajay Shriram Tomar Maninder Singh Vaibhav Bhausaheb Garje, R Guhan, Suyog Baban Gaikar, Parshant Kumar

Bengaluru Bulls

Neeraj Narwal Bharat, Saurabh Nandal Aman, Yash Hooda
Dabang Delhi K.C.

Vijay, Manjeet, Ashish Narwal, Suraj Panwar Naveen Kumar
Gujarat
Giants


Manoj Kumar, Sonu Rakesh Rohan Singh, Parteek Dahiya

Haryana Steelers

K. Prapanjan Vinay, Jaideep, Mohit Naveen, Monu, Harsh, Sunny


Jaipur Pink Panthers
Sunil Kumar, Ajith V Kumar, Reza Mirbagheri, Bhavani Rajput, Arjun Deshwal, Saulh Kumar

Ankush, Abhishek KS, Ashish, Devank
Patna Pirates Sachin, Neeraj Kumar Manish Thiyagarajan Yuvaraj, Naveen Sharma, Ranjit Venkatramana Naik, Anuj Kumar


Puneri PaltanAbinesh Nadarajan, Gaurav Khatri Sanket Sawant, Pankaj Mohite, Aslam Mustafa Inamdar, Mohit Goyat, Akash Santosh Shinde


Badal Taqdir Singh, Aditya Tushar Shinde
Tamil Thalaivas Ajinkya Ashok Pawar Sagar, Himanshu, M. Abishek, Sahil, Mohit, Aashish


Narender, Himanshu, Jatin
Telugu Titans

Parvesh Bhainswal Rajnish Mohit, Nitin, Vinay
U Mumba


Surinder Singh, Jai Bhagwan, Rinku, Heidarali Ekrami

Shivam Shivansh Thakur, Pranay Vinay Rane, Rupesh, Sachin
U.P. Yoddhas

Pardeep Narwal, Nitesh Kumar
Sumit, Ashu Singh, Surender Gill
Anil Kumar, Mahipal

புரோ கபடி சீசன் 10 ஏலத்தில் பவன் செஹ்ராவத் மற்றும் விகாஷ் கண்டோலா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர் என்ற செய்தி கபடி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

SEP 5 New Update....

இரண்டு புரோ கபடி பயிற்சியாளர்கள், ஆசிய கோப்பைக்கான இந்திய பயிற்சி முகாமில் இருந்ததால் முன்பு அறிவிக்கப்பட்ட ஏல தேதி ஒத்திவைக்கப்பட்டது.

வீரர்களின் ஏலம் அக்டோபர் 9,10....!

வீரர்களுக்கான ஏலம் நடைபெற்ற வீடியோவை காண கிளிக் செய்யவும் 

டிசம்பர் 2 தொடங்கி பிப்ரவரி 21 வரை நடைபெறும் ப்ரோ கபடி சீசன் 10 முதல் கால அட்டவணை; 

TAGS: Pro Kabaddi News | Pro Kabaddi Players |  Pro Kabaddi auction | Kabaddi News Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்